Power bank பயன்படுத்தத் தடை – விமான நிறுவனங்களின் முக்கிய தீர்மானம்

மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் Power bank பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Power bankகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ள விமான சேவை நிறுவனங்களின் வரிசையில் மலேசியா ஏர்லைன்ஸும் இணைந்துள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் அந்தச் சாதனங்களை அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து பயன்படுத்தமுடியாது.
விதிமுறை Firefly, MASwings விமான நிறுவனங்களுக்கும் பொருந்தும். சாதனங்களை இருக்கைக்கு மேலே இருக்கும் கைப்பைகளுக்கான இடத்திலும் வைக்கக்கூடாது என்று மலேசியா ஏர்லைன்ஸ் Facebookஇல் சொன்னது.
பயணிகள் Power bank சாதனங்களைக் கையோடு அல்லது இருக்கைக்குக் கீழ் வைக்கலாம் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காந்த முறையில் மின்னூட்டம் செய்யும் சாதனங்கள் தனிப் பையில் வைத்திருக்கப்படவேண்டும் என்று அது தெரிவித்தது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தாய் ஏர்வேஸ், ஏர் ஏஷியா ஆகியவையும் அண்மையில் Power bank சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.