‘பராசக்தி’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி (ரவி மோகன்), அதர்வா ஆகியோர் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடுவதால் ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு, படத்தைத் திரையிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் இதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





