பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக கருதி பிரித்தானியா விதித்துள்ள தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஆணைக்குழு ஏகமனதாக நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அகிம்சை வழிகளில் தனது அரசியல் மற்றும் சித்தாந்த இலக்குகளை அடைய முயல்வதால், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.
எனினும், ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட கேரிக்கை மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு ஆணைக்குழு, வெளிப்படையான தீர்மானத்தை வழங்கி இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.