இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு தடை!
இந்தியாவில் பயன்படுத்தப்படும் 156 மருந்துகளுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, காய்ச்சல், சளி மற்றும் ஆன்டிபயாட்டிக்குகளுக்கு பயன்படுத்தப்படும் பல வகையான மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மருந்துகளின் பயன்பாடு மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்த பின்னர், அவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த மருந்துகளுக்குப் பதிலாக மாற்று மருந்துகள் பயன்படுத்தக் கூடியவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





