இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொடர்பில் அமுலுக்கு வரும் தடை

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். வர்த்தமானி ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
அதற்கமைய, உணவு விளம்பரங்களில் 12 வயதுக்குட்பட்டவர்களை ஈடுப்படுத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவது தடைசெய்யப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி தெரிவித்திருந்தார்.
(Visited 60 times, 1 visits today)