நியூ ஜெர்சியில் (New Jersey) அமுலுக்கு வரும் தடை – மீறினால் சட்டநவடிக்கை!
நியூ ஜெர்சியில் (New Jersey) உணவகங்கள் மற்றும் பாடசாலைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கரண்டி மற்றும் பொருட்களை தடை செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
தொடர்புடைய சட்டமூலம் டேக்அவே ஆர்டர்களுக்கும் (takeaway orders) பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பாடசாலைகள் மற்றும், சுகாதார நிலையங்களுக்கு மாத்திரம் சில ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சட்டத்திற்கு இணங்காத உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறை இதே தவறை செய்யும் பொழுது தண்டப்பணமாக $1,000 டொலரும், விதி மீறலுக்காக கூடுதலாக $2,500 டொலரும் அபராதமாக விதிக்கப்படும்.
வசூலிக்கப்படும் அபராதங்களில் ஒரு பகுதி நியூ ஜெர்சி தூய்மை சமூகங்கள் திட்ட நிதிக்கு அனுப்பப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த கவலைகள் காரணமாக சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் சில குடியிருப்பாளர்கள் இதை ஆதரிப்பதால், இந்த திட்டம் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





