சசித்ர சேனாநாயக்கவுக்கு பிணை
மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சேனாநாயக்கவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சேனாநாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) போட்டிகளை சரிசெய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சேனநாயக்கவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்திருந்தது.
சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் முன்னதாக அறிவுறுத்தியிருந்தது.
2020 ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் (LPL) முதல் பதிப்பில் பங்கேற்கும் இரண்டு கிரிக்கெட் வீரர்களை துபாயில் இருந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் அணுகி, போட்டியின் போது போட்டிகளை ‘ஃபிக்ஸ்’ செய்ய தூண்டியதாக சேனநாயக்க மீது குற்றம் சாட்டப்பட்டது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை சேனநாயக்க மறுத்துள்ளார்.