கிம்புல்வானா ஓயாவில் தோட்டாக்கள் அடங்கிய பை மீட்பு!
குருணாகல் – கிம்புல்வானா ஓயாவில் 108 தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பையில் ரி-56 ரக 83 தோட்டாக்கள், எம்16 ரக 29 தோட்டாக்கள், 16 எம்பிஎம்ஜி தோட்டாக்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தோட்டாக்களை இந்த இடத்தில் விட்டுச் சென்றவர் குறித்து இதுவரை பொலிஸாருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)





