மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பதுளை பிராந்திய மருத்துவமனை
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை(Badulla) ஸ்பிரிங் வேலி(Spring Valley) பிராந்திய மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஊவா(Uva) மாகாண சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மூடப்பட்டதன் விளைவாக, ஸ்பிரிங் வேலி தோட்டத்தின் தொழிலாளர்கள் மற்றும் ஸ்பிரிங் வேலி உட்பட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன(Prabath Abeywardena), தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன புவியியலாளர்களால் நடத்தப்பட்ட விசாரணையில், மருத்துவமனைக்கு முன்னால் அமைந்துள்ள நமுனுகுல(Namunukula) மலைத்தொடரின் சரிவில் இருந்து மண்சரிவு அச்சுறுத்தல் இருப்பதாகக் கண்டறிந்துள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்காக, அந்தப் பகுதியில் உள்ள அபயபுர(Abhayapura) சமூக மண்டபத்தில் வெளிநோயாளர் சிகிச்சை சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரபாத் அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.





