இலங்கை செய்தி

சீரற்ற வானிலை – கொழும்பில் பல பகுதிகளில் அசுத்தமான குடி நீர்

கலடுவ நெட்வேர்க் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக பாதையின் ஒரு பகுதி வெள்ளம் காரணமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அசுத்தமான நீர் வடிந்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நிலமை காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (3) பிற்பகல் தெரிவித்தார்.

அந்த நிலைமை காரணமாக சில பிரதேசங்களுக்கு காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் கலகெதர, பாதுக்க, கொடகம, ஹோமாகம, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பலன்வத்த, மத்தேகொட, மஹரகம, மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.

அந்த பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் தண்ணீர் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட  பிரதான நீர் குழாயை விரைவில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!