பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளரின் மோசமான செயல் : சுற்றிவளைத்த பொலிஸார்!
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்கவைக்கும் விடுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி சவுத்தாம்ப்டனில் (Southampton) உள்ள விடுதியில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், எத்தியோப்பிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான அந்த நபர் இன்று மாலை சவுத்தாம்ப்டன் மாஜிஸ்திரேட் (Magistrates) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





