இலங்கையில் சிறுமிக்கு தந்தை செய்த மோசமான செயல் – கைது செய்த பொலிஸார்

தனது ஆறு வயது மகளுக்கு கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடிக்க வைக்க முயன்ற தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள சந்தேக நபரின் மனைவி பணம் அனுப்பாததால் கோபமடைந்த கணவர் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் ஹுங்கம, பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (119) கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேகநபர் அப்போது அதிகளவில் குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 17 times, 1 visits today)