ஸ்பெயினில் கொளுத்தும் வெயிலில் 5 மணி நேரம் காரில் விடப்பட்ட குழந்தை மரணம் – தந்தை கைது

ஸ்பெயினில் கொளுத்தும் வெயிலில் 5 மணி நேரம் காரில் தனியாக விடப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழந்த நிலையில் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
காலை 9 மணியளவில், வளர்ப்பு தந்தை குழந்தையை பகல்நேர பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றார், ஆனால் குழந்தையை மறந்து காருக்குள் விட்டுச் சென்றுள்ளார்.
வளர்ப்புத் தாய் மதியம் 2 மணியளவில் தனது குழந்தையை அழைத்துச் செல்ல பகல்நேர பராமரிப்பு மையத்திற்குச் சென்றபோது, அங்கு குழந்தை இல்லை.
52 வயது பெண் பின்னர் தனது 69 வயது கணவரை அழைத்தார். தம்பதியினர் தங்கள் காருக்கு விரைந்து சென்று குழந்தையின் உயிரற்ற உடலைக் கண்டனர்.
பெற்றோரின் பீதியைக் கண்டு, வழிப்போக்கர்கள் சட்ட அமலாக்க மற்றும் அவசர சேவைகளுக்குத் தகவல் தெரிவித்தனர். ஒரு மருத்துவக் குழு வந்து குழந்தையை உயிர்ப்பிக்க முயன்ற போதலும் முடியாமல் போயுள்ளது.
காரின் கண்ணாடிகள் கருப்பு நிறமாக இருந்ததால், குழந்தையை வெளியில் இருந்து பார்க்க முடியவில்லை. எனினும் தந்தையின் கவனயீனமே மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றன.