அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்து : மன்னிப்பு கோரிய புட்டின்!
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்து குறித்து விளாடிமிர் புடின் அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவிடம் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இல்ஹாமுடன் தொலைபேசியில் உரையாடிய அவர், ரஷ்ய வான்வெளியில் “சோகமான சம்பவம்” நடந்ததால் மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ரஷ்யாதான் காரணம் என அவர் கூறவில்லை.
“ரஷ்ய வான்வெளியில் நடந்த சோகமான சம்பவம் குறித்து விளாடிமிர் புடின் மன்னிப்பு கேட்டார், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த மற்றும் உண்மையான இரங்கலைத் தெரிவித்தார், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறார் என கிரம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் செச்னியா பிராந்தியத்தின் தலைநகரான க்ரோஸ்னியில் விமானம் தரையிறங்க முயன்றபோது, உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவைத் தாக்கியதாகவும், ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் தாக்குதல்களை முறியடித்ததாகவும் அது கூறியது.
ஒருவேளை இந்த தாக்குதலின்போது விமானம் சுடப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.