ஐயா கைது – சொகுசு கார், பல வங்கி அட்டைகள் மீட்பு
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் வசந்தகுமாரவின் நிதி விவகாரங்களின் பிரதானியாகக் கருதப்படும் ஐயா என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் நபர், மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இதற்கு முன்னர் 187 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு 60 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நல்ல நடத்தை காரணமாக 10 வருட சிறைத்தண்டனையை முடித்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.
45 வயதுடைய சந்தேகநபர் கம்பஹா இண்டிகொல்ல மாவட்டத்தில் வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 7 மாதங்களுக்கு முன்னர் வர்த்தகர் என சுட்டிக்காட்டி 100,000 ரூபா வாடகை அடிப்படையில் சொகுசு வீட்டை பெற்றுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, 6430 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 8 கையடக்கத் தொலைபேசிகள், 10 தொலைபேசி சிம்கள், 7 வங்கி அட்டைகள் மற்றும் நவீன கார் ஒன்றும் மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான வசந்த குமார சிறையிலிருந்த போது அவருடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகளின் அடிப்படையில் இந்த ஹெரோயின் கடத்தல் நீண்டகாலமாக நடத்தப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.