அயோத்தி ராமர் கோயிலுக்கு 2,400 கிலோ எடையுள்ள மணி நன்கொடை
அயோத்தி ராமர் கோயிலுக்கு 2,400 கிலோ எடையுள்ள மணியைப் பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22ம் திகதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு எட்டா மாவட்டத்தில் உள்ள ஜலேசர் நகரில் ரூ.25 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட ‘அஷ்டதாது’ (எட்டு உலோகங்கள்) மூலம் 2,400 கிலோ எடையுள்ள பிரமாண்டமான மணி கட்டப்பட உள்ளது.
ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட மணி, செவ்வாய்க்கிழமை அயோத்தியை அடைந்தது, அது மாவட்டத்தின் துணைப் பிரிவுகளில் வாகனத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
பிரம்மாண்ட இந்த மணியின் ஓசை சுமார் 10 கி.மீ வரை கேட்கக்கூடிய திறனுடையதாக அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 தொழிலாளர்களைக் கொண்ட பலதரப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட மணி, தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், ஈயம், தகரம், இரும்பு மற்றும் பாதரசம் ஆகிய எட்டு உலோகங்களால் ஆனது என்பது இதன் சிறப்பாகும்.
உலோக வியாபாரியான ஆதித்யா மிட்டல், தனது மறைந்த சகோதரர், ஜலேசர் நகர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் விகாஸ் மிட்டல், கோயிலுக்கு மணியை நன்கொடையாக வழங்க விரும்புவதாக கூறினார்..