பிளாஸ்டிக்கால் விலங்குகளுக்கு பாதிப்பு; வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி
இந்து பௌத்த சங்கத்தினரின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்றைய தினம் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்து பௌத்த சங்கத்தினரின் ஏற்பாட்டில் பொலித்தீன் பாவனையை தடைசெய்வோம் எனும் தொனிப்பொருளில் குறித்த நடைபவனி பேரணியானது நடைபெற்றுள்ளது.
பொலித்தீன் பாவனையால் ஏற்படும் தீமைகள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் தீமைகள் போன்றவற்றை மக்களுக்கு தெளிவூட்டும் விதமாக நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பூங்கா வீதியில் உள்ள பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நகர் வழியாக சென்று வவுனியா பேருந்து தரிப்பிடத்தை சென்றடைந்தது.
இதன்போது வீதியிலிருந்த பொலித்தீன் உள்ளடங்கிய பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் எடுத்து சென்று அழிப்பதற்காக நகரசபையினரிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடைபவனியில் வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்து பௌத்த சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.