சிந்தூர் நடவடிக்கையின் போது வீரர்களுக்கு உணவு வழங்கிய 10 வயது சிறுவனுக்கு விருது
ஜம்மு காஷ்மீரின்(Jammu and Kashmir) பஹல்காம்(Pahalgam) நகரில் கடந்த ஏப்ரல் 22ம் திகதி பாகிஸ்தான்(Pakistan) திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் பொது மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, மே 7ம் திகதி ஆபரேஷன் சிந்தூர்(Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த சிந்தூர் நடவடிக்கையின் போது போர் தொடர்பான ஆபத்துகளுக்கு மத்தியில் பஞ்சாபின்(Punjab) ஃபெரோஸ்பூர்(Ferozepur) எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களுக்கு தண்ணீர், பால் மற்றும் உணவு வழங்கி 10 வயது ஷ்ரவன் சிங்(Shravan Singh) உதவி செய்துள்ளார்.
இந்நிலையில், அந்த சிறுவனுக்கு இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு(Draupadi Murmu) பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்(Pradhan Mantri Rashtriya Bal Puraskar) விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
“பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியபோது, வீரர்கள் எங்கள் கிராமத்திற்கு வந்தனர். நான் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நான் தினமும் பால், தேநீர், மோர் மற்றும் ஐஸ் ஆகியவற்றை அவர்களுக்காக எடுத்துச் செல்வேன்” என்று 10 வயது சிறுவன் செய்தி நிறுவனமான ANI இடம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,”விருது பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அதை ஒருபோதும் கனவு கண்டதில்லை,” என்று தெரிவித்துள்ளார்.





