AUSvsWI – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 277 ஓட்டங்கள் இலக்கு
ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 286 ரன்னில் ஆட்டமிழந்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 73.2 ஓவர்களில் 253 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
33 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
2வது இன்னிங்சில் 71.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 277 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.
அபாரமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும், ஜெய்டன் சீல்ஸ், அல்சாரி ஜோசப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.





