செய்தி விளையாட்டு

AUSvsIND – சமநிலையில் முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்து இருந்தது.

இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. 193 ரன்கள் பின்தங்கி, கைவசம் 1 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.

போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் கடைசி விக்கெட் சரிந்தது. இந்திய அணி 78.5 ஓவரில் 260 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

185 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கிய போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை போட்டி மீண்டும் தொடங்கவில்லை.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மழை விட்டதும் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது.

இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சாலும் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. 11 ஓவரில் 33 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டை இழந்தது.

18 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்த போது ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதனால் இந்தியாவுக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்ததுள்ளது. தொடர்ந்து மழை பெறுவதால் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி வருகிற 26ந் தேதி தொடங்குகிறது.

 

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!