ரஷ்யாவின் எரிவாயு இறக்குமதி ஒப்பந்தத்தை நிறுத்த ஆஸ்திரியா முயற்சி

ரஷ்யாவின் எரிவாயு இறக்குமதி ஒப்பந்தத்தை நிறுத்த ஆஸ்திரியா தீர்மானித்துளளதாக ஆஸ்திரியாவின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காஸ்ப்ரோமில் இருந்து எரிவாயு வாங்குவதற்கான எரிசக்தி நிறுவனமான OMV இன் நீண்ட கால ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட தீவிர நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரியா முயல்கிறது என்று எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒப்பந்தத்தை முடிப்பதால் ஏற்படும் பொருளாதார தாக்கம் மற்றும் ரஷ்ய எரிவாயுவை சார்ந்து இருப்பதன் ஆபத்துகள் குறித்து கோடைகாலத்திற்குள் ஒரு ஆய்வை தயாரிக்கும் பணியை பொருளாதார சிந்தனையாளர் குழுவான வைஃபோவை தனது அமைச்சகம் நியமிப்பதாக கெவெஸ்லர் கூறினார்.
(Visited 11 times, 1 visits today)