பென்டகனில் நடைபெற்ற முத்தரப்பு பாதுகாப்பு கூட்டம்!
ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
பென்டகன் எனப்படும் அமெரிக்க இராணுவத் தலைமையகத்திலேயே முத்தரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஆக்கஸ் (AUKUS) எனப்படும் பாதுகாப்பு கூட்டணியில் மேற்படி மூன்று நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.
ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா கொள்வனவு செய்யவுள்ளது.
இதற்குரிய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணக்கம் வெளியிட்டிருந்தன.
எனினும், அமெரிக்காவுக்கு முதலிடம் என்ற கொள்கையால் இத்திட்டம் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இதனை பெற்றுக்கொள்வதற்குரிய இராஜதந்திர நகர்வுகளில் ஆஸ்திரேலியா இறங்கியது.
இதற்கமையவே பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதனை சிறந்த முன்னேற்றமாக ஆஸ்திரேலியா கருதுகின்றது.




