செய்தி

இலக்கை அடையாமல் திரும்பிய ஆஸ்திரேலிய விமானம் – வெளியான காரணம்

கிறிஸ்துமஸ் தினத்தன்று பறந்து கொண்டிருந்த குவாண்டாஸ் விமானம் இலக்கை அடையாமல் திரும்பியுள்ளது.

சிட்னியில் இருந்து தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நோக்கிப் பறந்து கொண்டிருந்த QF63 தாங்கிய ஏர்பஸ் A380 விமானமே இவ்வாறு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை காலை 10:00 மணிக்குப் பிறகு விமானம் சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது, விமானம் அன்று மாலை 3:00 மணியளவில் தென்னாப்பிரிக்க தலைநகரை வந்தடைய திட்டமிடப்பட்டது.

எவ்வாறாயினும், அண்டார்டிகா மீது பறக்கும் போது அடையாளம் தெரியாத தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் இரவு 7.30 மணியளவில் சிட்னிக்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தற்போது குவாண்டாஸ் நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நேற்று (25) முதல் இன்று (26) வரை தேவையான வசதிகளை வழங்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி