ஆஸ்திரேலிய பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நபர் 28 வயதில் மரணம்
ஆஸ்திரேலியாவிற்காக பாராலிம்பிக்(Paralympic) தங்கப் பதக்கம் வென்ற பைஜ்(Paige Greco) கிரேக்கோ 28 வயதில் காலமானார்.
டோக்கியோ(Tokyo) 2020 பாராலிம்பிக் போட்டிகளில் தனது நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற பாரா-சைக்கிள் ஓட்டுநர் அடிலெய்டில்(Adelaide) உள்ள தனது வீட்டில் உடல்நலம் குறைவால் காலமானார் என்று விளையாட்டின் தேசிய நிர்வாக அமைப்பான ஆஸ் சைக்ளிங் தெரிவித்துள்ளது.
பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட பைஜ் கிரேக்கோ, 2018ல் சைக்கிள் ஓட்டுதலுக்கு மாறுவதற்கு முன்பு ஒரு தடகள வீரராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.
கிரேக்கோ கடந்த ஆண்டு பாரிஸில்(Paris) நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கான தேர்வுச் சுற்றுகளில் இருந்து உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக வெளியேறினார்.
(Visited 3 times, 3 visits today)





