குடியேறிகளுக்கு எதிரன பேரணி ; கண்டனம் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசாங்கம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற குடியேறிகளுக்கு எதிரானப் பேரணியை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.அத்தகைய பேரணி வெறுப்புணர்வைப் பரப்புவதாக அது சாடியது.
நாட்டில் அதிக மக்கள் வாழும் நகரங்களில் சிட்னியும் ஒன்று. அங்கு குடியேறிகளும் அதிகமாக வசிக்கின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) ஆஸ்திரேலியாவுக்கான பேரணி என்ற பெயரில் குடியேறிகளுக்கு எதிராகப் பலர் திரண்டனர்.
ஆஸ்திரேலியா முழுவதும் தலைநகரங்களிலும் இதர இடங்களிலும் பேரணி நடைபெறும் என்று முன்னதாக பேரணி ஏற்பாட்டுக் குழுவின் இணையத்தளம் தெரிவித்திருந்தது.
“பெரும்பான்மையான குடியேற்றம் நமது சமூகங்களை ஒன்றிணைத்த பிணைப்புகளை கிழித்துவிட்டது,” என்று அது கூறுகிறது.
ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று எக்ஸ் தளத்தில், பேரணிகள் “அரசியல்வாதிகள் ஒருபோதும் செய்யத் துணியாததைச் செய்வதையும் பேரளவு குடியேற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பேரணியைக் கண்டித்துள்ள அரசாங்கம், “’மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா’ பேரணியை நாங்கள் முற்றிலும் கண்டிக்கிறோம்.” என்று தொழிலாளர் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் முர்ரே வாட் தெரிவித்துள்ளார்.
“வெறுப்பைப் பரப்புவது பற்றிய மற்றும் நமது சமூகத்தைப் பிரிப்பது பற்றிய இதுபோன்ற பேரணிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை,” என்று வாட் கூறினார்.