செய்தி

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் ஹர்டில் 28 ரன்களும், மேத்ய ஷார்ட் 32 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஷ் ராஃப் 4 விக்கெட்டும், அப்பாஸ் அப்ரிடி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இர்பான் கான் 28 பந்தில் 37 ரன்கள் அடித்தார்.

மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 19.4 ஓவரில் 134 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. 3-வது மற்றும் கடைசி போட்டி 18-ந்தேதி நடக்கிறது.

(Visited 51 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி