இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், ஒருநாள் தொடரின் முதலாவது மற்றும் இரண்டாவது போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இன்று நடந்த மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி சிட்னி (Sydney) மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 46.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் மிச்சேல் மார்ஷ் (Mitchell Marsh) 46 ஓட்டங்களும் ரென்ஷாவ் (Renshaw) 56 ஓட்டங்களும் பெற்றனர்.
இந்நிலையில், 237 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது.

இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) சிறப்பாக விளையாடி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தனர்.
ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 121 ஓட்டங்களும் விராட் கோலி 74 ஓட்டங்களும் பெற்றனர்.
தொடரின் இறுதி போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் தொடரை 2-1 என்ற அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தொடரின் ஆட்ட நாயகன் விருதையும் ரோஹித் சர்மா தட்டி சென்றுள்ளார்.
தொடர்புடைய செய்தி
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி – தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா





