மகளிர் உலகக் கோப்பை – ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்தவகையில், இந்தூரின் ஹோல்கர் (Holkar) மைதானத்தில் நடைபெற்ற 23வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.
அணிக்காக சிறப்பாக விளையாடிய டமி பியூமாண்ட் (Tammy Beaumont) 78 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
இந்நிலையில், 245 என்ற ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 40.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் அன்னபெல் சதர்லேண்ட் (Annabel Sutherland) 98 ஓட்டங்களும் ஆஷ்லே கார்ட்னர் (Ashleh Gardner) சதம் அடித்து 104 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.
இன்றைய வெற்றியுடன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.