செய்தி விளையாட்டு

5வது போட்டிக்காக பிங்க் நிறத்தில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக டிரா ஆனது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு தயாரான ஆஸ்திரேலிய அணி குழு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. புகைப்படங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் பிங்க் நிற தொப்பி அணிந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சிட்னியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பிங்க் டெஸ்ட் என்ற பெயரில் நடத்தப்படுகிறது.

இதனை பிரதிபலிக்கும் வகையில் தான் ஆஸ்திரேலிய வீரர்கள் பிங்க் நிற தொப்பி அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்க இருக்கிறது.

(Visited 53 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி