அமெரிக்க தயாரிப்பானM1A1 ஆப்ராம்ஸ் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா தனது பழைய M1A1 ஆப்ராம்ஸ் டாங்கிகளில் 49 டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
245 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ($163 மில்லியன்) மதிப்புள்ள அமெரிக்கத் தயாரிப்பான M1A1 டாங்கிகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் உக்ரைனுக்கு வழங்கி வருகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மார்ல்ஸ், உக்ரைனுக்கு எவ்வாறு சிறந்த ஆதரவை வழங்குவது என்பது பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை ஆயுதங்கள் தொடர்பான அமெரிக்க சர்வதேச போக்குவரத்து விதிமுறைகளின்படி, டாங்கிகளை உக்ரைனுக்கு மாற்ற அவுஸ்திரேலியாவுக்கு தேவையான அனுமதியை அமெரிக்கா வழங்கியதாக பாதுகாப்புத் தொழில் மற்றும் திறன் விநியோக அமைச்சர் பாட் கான்ராய் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)