செய்தி விளையாட்டு

இலங்கை டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் அவுஸ்திரேலிய விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் செயற்படவுள்ளார்.

அதேநேரம் அவுஸ்திரேலிய அணியின் சிரேஷ்ட வீரர்களான ஜோஷ் ஹெசல்வூட் மற்றும் மிட்செட் மார்ஸ் ஆகியோருக்கு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் தகவல்களுக்கு அமைய, ஜோஷ் ஹெசல்வூட்டுக்கு உபாதை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இடம்பெறவுள்ள 2025 ஐ.சி.சி சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது அவர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), டிராவிஸ் ஹெட் (Travis Head (vc), சீன் அபோட் (Sean Abbott), ஸ்காட் போலண்ட் (Scott Boland), அலெக்ஸ் கேரி (Alex Carey), கூப்பர் கன்னொலி (Cooper Connolly), ஜோஷ் இங்கிலிஸ் (Josh Inglis), உஸ்மான் கவாஜா (Usman Khawaja), சாம் கொன்ஸ்டாஸ் (Sam Konstas), மேத்யூ குஹ்னெமன் (Matt Kuhnemann), மார்னஸ் லபுஷாக்னே (Marnus Labuschagne), நாதன் லையன் (Nathan Lyon), நாதன் மெக்ஸ்வீனி (Nathan McSweeney), டாட் மர்ஃபி (Todd Murphy), மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc), பியூ வெப்ஸ்டர் (Beau Webster) ஆகியோர் அவுஸ்திரேலிய குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி