உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது ஆஸ்திரேலியா!
உக்ரைன்மீதான சட்டவிரோத போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆஸ்திரேலியா, உக்ரைனுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese ஆகியோருக்கிடையிலான தொலைபேசி உரையாடல் நேற்று இடம்பெற்றது.
இதன்போது சிட்னி, போண்டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபங்களை உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேற்படி தாக்குதலில் உயிரிழந்த 15 பேரில் அறுவர், உக்ரைன் வம்சாவளி ஆஸ்திரேலியர்களாவர்.
அதேவேளை ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்பிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஆதரவு உக்ரைனுக்கு தொடரும் எனவும் பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.
ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியா பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





