ஆஸ்திரேலியாவில் யூத வழிபாட்டுத் தலத்தில் தீவிபத்து – பிரதமர் விடுத்த எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2 பேர் வேண்டுமென்றே தீயை மூட்டினர் என்று பொலிஸார் சந்தேகிக்கிறது.
இன்று அதிகாலை அங்கு தீப்பற்றியதில் ஒருவர் காயமுற்றதுடன் வழிபாட்டுக் கட்டடம் கணிசமாகச் சேதமடைந்தது.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி அந்தத் தாக்குதலைச் சாடினார். யூதர்களுக்கு எதிரான உணர்விற்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தைத் தடுக்கும் காவல்துறைப் பிரிவு விசாரணை குறித்து விக்டோரியா மாநிலக் பொலிஸாரிடம் பேசும் என்று பிரதமர் அல்பனீசி குறிப்பிட்டார்.
வழிபாட்டுத் தலத்தினுள் தீ பரவ உதவும் பொருளை இருவர் காலையில் பயன்படுத்தியதை அங்குச் சென்ற ஒருவர் பார்த்திருக்கிறார்.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் புலப்படவில்லை என்றும் அது கண்டிப்பாகக் கண்டுபிடிக்கப்படும் என்றும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.