ரஷ்ய தூதரகத்தை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றிய அவுஸ்ரேலியா!
ரஷ்ய தூதரகத்தை தடை செய்யும் சட்டத்தை அவுஸ்ரேலியா நிறைவேற்றியுள்ளது.
இதன்படி அவுஸ்திரேலியாவின் பாராளுமன்றத்திற்கு அருகில் புதிய தூதரகம் ஒன்றை அமைப்பதற்கு ரஷ்யாவிற்கு தடை விதிக்கும் விதிக்கும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் ரஷ்யாவின் குத்தகையை முடிவுக்குக் கொண்டுவரும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.
“பாராளுமன்றத்திற்கு மிக அருகில் ஒரு புதிய ரஷ்ய பிரசன்னத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து அரசாங்கம் மிகத் தெளிவான பாதுகாப்பு ஆலோசனையைப் பெற்றுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவின் பின்னணியில் பாராளுமன்ற கட்டிடத்தில் “சாத்தியமான குறுக்கீடு” இருப்பதாக அவர் கூறினார்.
இந்நிலையில், ரஷ்ய தூதரகம் க்ரிஃபித்தில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 7 times, 1 visits today)