உலகம் செய்தி

ஆஸ்திரேலியா மீது வியட்நாம் கடும் எதிர்ப்பு

தெற்கு வியட்நாமின் மஞ்சள் நிறக் கொடி உருவம் கொண்ட நாணயத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டதற்கு வியட்நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இருதரப்பு உறவுகளில் சாதகமான போக்குகளை நிராகரிப்பதாக கூறியுள்ள வியட்நாம் நாணயத்தின் புழக்கத்தை நிறுத்துமாறு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வியட்நாமில் இருந்து தனது படைகள் வாபஸ் பெறப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவுஸ்திரேலியா இந்த வரையறுக்கப்பட்ட இரண்டு டொலர் நாணயத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வியட்நாமின் வெளிவிவகார பிரதி செய்தித் தொடர்பாளர் மூன்று கோடுகள் கொண்ட மஞ்சள் கொடியுடன் பொருட்களை வெளியிடுவதையும் புழக்கத்தில் விடுவதையும் வன்மையாக எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த நாணயத்தின் முன்பகுதியில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவமும் பின்புறம் ருர்-1ர் ஹெலிகாப்டரும் இருப்பதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!