உலகம் செய்தி

அவுஸ்திரலியா: கடற்கரை தாக்குதலில் பயங்கரவாதியைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட நபர்

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் (Bondi Beach) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, ​​தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட இரண்டு குழந்தைகளின் தந்தையும், பழக்கடை உரிமையாளருமான 43 வயது அஹமது அல் அஹ்மத் (Ahmed El Ahmad) ஒரு வீரனாகப் பாராட்டப்படுகிறார்.

அஹமது அல் அஹ்மத், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை துணிச்சலுடன் நிராயுதபாணி ( disarming) ஆக்கியதை அடுத்து,
இரண்டாவது துப்பாக்கிதாரியால் இரண்டு முறை சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஹ்மத், குணமடைவார் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை (New South Wales Police) வெளியிட்டுள்ள தகவலின்படி

போண்டி கடற்கரையில் உள்ள யூத சமூகத்தை (Jewish community) இலக்காக வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட 11 பேரில், யூத மத போதகர் (Chabad rabbi) ஒருவரும் அடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு குழந்தை உட்பட 29 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய ஒரு நபர் கொல்லப்பட்டுள்ளார், மற்றுமொரு சந்தேக நபர் படுகாயமடைந்துள்ளார். துப்பாக்கிதாரியுடன் இணைக்கப்பட்ட காரில் (improvised explosive device)  எனப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!