சமூக ஊடகங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க சமூக ஊடகங்களுக்கு குறைந்தபட்ச வயதை சட்டமாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
இது பெற்றோரை ஆதரிப்பது மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
X ல் , “குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க சமூக ஊடகங்களுக்கு குறைந்தபட்ச வயதை நாங்கள் சட்டமாக்குவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் , “சமூக ஊடகங்களில் தங்கள் குழந்தைகள் என்ன வயதில் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கவலைப்படுவதாக என்னிடம் கூறுகிறார்கள். சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களுக்கு குறைந்தபட்ச வயதை அமல்படுத்துவதற்கான சட்டத்தை இந்த பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவோம்.” என்று தெரிவித்துளளார்.
(Visited 44 times, 1 visits today)