ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு சமூக ஊடகம் தடை – வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகக் கணக்குகளைத் தடை செய்யும் சட்டம் டிசம்பரில் அமலுக்கு வருகின்றது.
டிசம்பர் 10ஆம் திகதிமுதல் சிறுவர்களுக்கான டிக்டாக், பேஸ்புக், ஸ்னாப்சாட், ரெடிட், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு, 16 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு சமூக ஊடகத் தடையை முன்மொழிந்த உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா ஆனது.
இருப்பினும், இந்தத் தடையில் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்ட பிற தளங்களான மெட்டாவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக் ஆகியவை ஏற்கனவே இந்த முன்மொழியப்பட்ட தடைக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.





