உலகம் செய்தி

யூத சமூக பிரபலத்தின விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் உரையாற்றிருந்த யூத சமூக ஊடக பிரபலமான சமி யாஹூத்தின் Sammy Yahood விசா இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

விமானப் பயணம் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னரே இவ்வாறு விசா இரத்து செய்யப்பட்டதாக வலதுசாரி நிலைப்பாட்டைக் கொண்ட ஆஸ்திரேலிய யூத சங்கம் Australian Jewish Association (AJA தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பெர்க் Tony Burke இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

வெறுப்புணர்வை பரப்புவதற்கு ஆஸ்திரேலியா களம் அல்ல எனவும் அவர் கூறினார்.

மேலும், “ஆஸ்திரேலியாவுக்கு வர விரும்புவோர் உரிய விசாவிற்காக விண்ணப்பித்து, சரியான நோக்கத்துடன் வர வேண்டும்” எனவும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

விசா ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்வினையாக, யாஹ_த் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு, லேபர் அரசு ‘அதிகாரத் துஷ்பிரயோகம்’ மற்றும் ‘தணிக்கை’ மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார்.

பிரிட்டனில் வளர்ந்து, அண்மையில் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த சமி யாஹூத் ஆஸ்திரேலியாவில் ‘சுய பாதுகாப்பு பயிற்சிகள்’ நடத்தவும், என்ற பிரச்சாரத்தை ஆரம்பிக்கவும் திட்டமிட்டிருந்தார்.

இஸ்லாம் தடை செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்திவந்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!