ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா – கான்பெராவில் அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள நிலத்தில் புதிய தூதரக கட்டிடம் கட்ட ரஷ்யா விடுத்த கோரிக்கையை அவுஸ்திரேலிய அரசு நிராகரித்துள்ளது.
குத்தகை அடிப்படையில் தொடர்புடைய நிலத்தை ரஷ்யா கையகப்படுத்தியுள்ளதாகவும், புதிய தூதரக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளத்தை அவர்கள் ஏற்கனவே தயார் செய்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இது தொடர்பான நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய போதிலும், இன்று (15) அதற்கெதிராக புதிய சட்ட வரைவு ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.





