எரிசக்திச் செலவு: டோமாகோ அலுமினிய ஆலைக்கு அவுஸ்ரேலிய அரசு உதவி.
அவுஸ்ரேலியாவின் முக்கிய டோமாகோ அலுமினிய உருக்காலை மூடப்படும் (Tomago Aluminium Smelter) அபாயத்தில் இருந்து மீண்டுள்ளது. அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் காரணமாக ஆலை மூடப்படும் என்று அதன் உரிமையாளர் ரியோ டின்டோ (Rio Tinto) அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ( Anthony Albanese) தலைமையிலான மத்திய அரசு ஒரு முக்கிய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வரி செலுத்துவோரின் நிதியைப் பயன்படுத்தி மலிவு விலையில் மின்சாரம் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்த நடவடிக்கை 1,000க்கும் மேற்பட்ட வேலைகளைப் பாதுகாப்பதுடன், அவுஸ்ரேலிய உற்பத்தியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான முடிவு என்றும் பிரதமர் அல்பானீஸ் (Anthony Albanese) தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த மின்சார நுகர்வில் சுமார் 10% பயன்படுத்தும் இந்த ஆலை திறந்திருப்பது தொழிலாளர் சங்கத்துக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.





