செய்தி விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று முடிந்தது.

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா வெற்றி பெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான சாம் கோன்ஸ்டாஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 6 ரன்களுக்கும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் வெஸ்டர் இந்திய அணி பந்துவீச்சாளர்களிடம் சிக்காமல் ரன் குவித்தனர்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.

(Visited 39 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி