செய்தி விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அறிவிப்பு

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3 – 1 என வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மறுபுறம், தென்னாப்பிரிக்காவும் அதிக வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 அன்று தொடங்க உள்ளது.

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று காலை அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோர் இந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-

உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், மேத்யூ குஹ்னெமன், பிரெண்டன் டாகெட் (டிராவலிங் ரிசர்வ்)

இந்நிலையில் டெம்பா பவுமா தலைமையிலான 16 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் ஐபிஎல் தொடரில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன் ஆகியோர் உள்ளனர். இது ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவாக இருக்கும்.

டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் பட்டுசாமி, டேன் பட்டுசாமி.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி