செய்தி விளையாட்டு

முதல் நாளிலேயே 17 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து பண்ட் – நிதிஷ் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.

ரிஷப் பண்ட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் 41 ரன்னில் வெளியேறினார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கவாஜா- நாதன் மெக்ஸ்வீனி ஆகியோர் களமிறங்கினர். நாதன் மெக்ஸ்வீனி 10 ரன்னிலும் கவாஜா 8 ரன்னிலும் ஸ்மித் 0 ரன்னிலும் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹெட் அதிரடியாக 2 பவுண்டரிகளை விளாசினார். 11 ரன்கள் எடுத்த போது ஹர்சித் ரானா பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து மிட்செல் மார்ஷ் 6, லபுசேன் 2, கம்மின்ஸ் 3 என ஆட்டமிழந்தனர்.

இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் கேரி 19 ரன்களுடனும் ஸ்டார்க் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும் சிராஜ் 2 விக்கெட்டும் ஹர்சித் ரானா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

(Visited 22 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி