கரியமில வாயு வெளியேற்றத்தை 70% வரை குறைக்க இலக்கு வைத்துள்ள ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா தனது கரியமில வாயு வெளியேற்றத்தை 2035 ஆம் ஆண்டுக்குள் 62% முதல் 70% வரை குறைக்க இலக்கு வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 43% குறைப்பு மற்றும் 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு கையெழுத்திடப்பட்ட பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ், நாடுகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தங்கள் உமிழ்வு குறைப்பு இலக்குகளை அதிகரிக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
இதன் அடிப்படையில் ஆஸ்திரேலியான மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இதனை ஐக்கியநாடுகள் சபைக்கு சமர்பிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 6 times, 6 visits today)