AUS vs IND – வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் கே.எல். ராகுல், சுப்மன் கில் முறையே 37 மற்றும் 31 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் நிதிஷ் குமார் 42 ரன்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 22 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய உஸ்மான் குவாஜா பும்ரா வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் பொறுமையாக ஆடினர்.
நாதன் மெக்ஸ்வீனி மற்றும் லபுஷேன் ஜோடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தாமல், அவுட் ஆகாமல் களத்தில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கவனமாக ஆடினர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் வெறும் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 94 ரன்கள் பின்தங்கியுள்ளது.