பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் சாணக்கியன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன என்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார் என சாணக்கியன் எம்.பி சபையில் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம் என்று கூறி தாக்க முற்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும்? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே உயிருக்கு உத்தரவாதம் இந்நாட்டில் இல்லை. எனது சிறப்புரிமை மீறியமைக்காக பாராளுமன்றத்தில் எனது வாக்குமூலம் பதியப்பட்டதென சாணக்கியன் எம்.பி சபையில் தெரிவித்தார்.
(Visited 16 times, 1 visits today)