இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்கு உணவில் விஷம் கலந்து கொலை செய்ய முயற்சி ?

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியொருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் பிரதிவாதிகளாகப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பலரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கான பாதுகாப்பில் அச்சம் ஏற்பட்டுள்தாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

உணவில் விஷம் கலந்து கொலை செய்ய முயற்சி இடம்பெறலாம் என குடும்பத்தினர் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில்,
வீட்டிலிருந்து உணவு வழங்க நீதிமன்ற உத்தரவும் கோரப்பட்டுள்ளது.

சந்தேக நபரை CID வளாகத்திற்கு வெளியே அழைத்துச் சென்று அவரது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி இடம்பெறலாம் என்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!