அதிபர் ஜெலன்ஸ்கி மீது கொலை செய்ய முயற்சி – சிக்கிய பெண்!
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷ்யாவின் சதி திட்டத்திற்கு உதவியதாக பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், உக்ரைனில் உள்ள ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட முக்கிய உளவு தகவல்களை ரஷ்ய ராணுவத்திற்கு அப்பெண் கொடுத்து வந்தமை தெரியவந்துள்ளது.
பெண்ணின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், உக்ரைன் அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரித்த போதே இந்த சதி திட்டம் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
(Visited 13 times, 1 visits today)





