தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி! மக்களுக்கு எச்சரிக்கை
சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி.
இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதில் பலர் சிக்குவதும் உண்டு, பலர் இன்னும் வரை சிக்காமல் வாழ்ந்து வருகின்றனர். இதை எதிர்த்து பல கண்டனங்களும், எச்சரிக்கைகளும் வந்தாலும் ஒரு பக்கம் இது போன்ற மோசடிகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், நேற்று ஒரு மர்ம நபர் இவர் ஒருவர் தோனியின் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தி சமூகவலைத்தளத்தில் மோசடி செய்ய முயற்சித்துள்ளார். அந்த பதிவில் அவர், “வணக்கம் நான் எம்.எஸ்.தோனி, நான் எனது தனிப்பட்ட கணக்கில் இருந்து உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்புகிறேன். நான் ராஞ்சியில் புறநகரில் ஒரு இடத்தில் இருக்கிறேன். நான் எனது பணப்பையை மறந்து வைத்து விட்டேன்.
எனக்கு 600 ருபாய் அனுப்ப முடியுமா? நான் வீட்டிற்கு சென்றதும் உங்களுக்கு திருப்பி அனுப்புகிறேன்”, என்று அந்த நபர் தோனி செல்ஃபியுடன் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சிறுது நேரத்திலேயே சமூகத்தளத்தில் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வந்தது. மேலும், மோசடி செய்ய முயற்ச்சித்த அந்த மர்ம நபரை நெட்டிசன்கள் கண்டித்தும், அவர்களது கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.
இப்படி ஆன்லைனில் ஆள்மாறாட்டம் செய்வது புதிய விஷயம் அல்ல இருந்தாலும் பிரபலங்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் எவ்வளவு அப்பட்டமாகப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் எந்த ஒரு எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது. மேலும், இது தொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தி பல பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.